Monday, January 06, 2014

மாணவர்களுக்கு அரசுவழங்கும் பொருட்களை வாங்கஅலையும் ஆசிரியர்கள்பாதிப்புக்குள்ளாகும் கல்விப்பணி

மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின்
அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்து 184
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய
நிதி தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு அரசு சார்பில் புத்தகங்கள்,
இலவச யூனிபார்ம், கலர்பென்சில் மற்றும்
புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஆனால் இப் பொருட்கள் அனைத்தும்
ஒரே நேரத்தில் வழங்கப்படாமல்
தவணை முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவை அனைத்தையும் எடுத்து செல்ல
சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்
அல்லது ஆசிரியர்கள் சாக்குப்
பை எடுத்து வந்து வாங்க வேண்டிய
நிலை உள்ளது.
உதவி தொடக்கல்வி அலுவலகத்துக்கு அருகே
உள்ள பள்ளிகளுக்கு இவற்றை ஆட்டோக்களில்
எடுத்து செல்கின்றனர். ஆனால்
தொலைதூரத்தில் உள்ள
பள்ளிகளுக்கு எடுத்து செல்ல ரூ 500க்கு மேல்
செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள்
இல்லாத போது கற்பித்தல் முறையும்
பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது,
மாணவர்களின் கல்வித் தரம் சீர்குலையவும்
வாய்ப்புள்ளது. தவிர புத்தகங்கள் பெற
அடிக்கடி ஆசிரியர்கள்
கல்வி துறை அலுவலகத்திற்கு அலைந்து
வருவதால் மாணவர்களின்
அடிப்படை கல்வி பாதிக்கப்படும்
நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர்
கூறுகையில்.
வருடத்துக்கு 13
முறை மாணவர்களுக்கு வழங்கப்படும்
விலையில்லா பொருட்கள் வாங்க அலைய
வேண்டியது உள்ளது. அது மட்டுமல்லாது,
விட்டுப் போன பொருட்களை வாங்கவும் திரும்ப
திரும்ப செல்ல வேண்டியதுள்ளது. இத்தகைய
பொருட்களை வாகனங்கள் மூலம்
ஏற்றி செல்லும்
செலவுகளை பள்ளி தலைமை ஆசிரியர்களே
ஏற்க வேண்டியதுள்ளது. மேலும் இதனால்
ஏற்படும் கால விரயத்தால் பள்ளியில் பாடம்
கற்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பொருட்களை வாங்க வரிசையில் கால்கடுக்க
நின்று காத்திருந்து வாங்க
வேண்டியது உள்ளது.
மேலும் இந்த பொருட்களை பஸ்சில் ஏற்றுவதும்
இல்லை. பஸ் இல்லாத
பகுதிகளுக்கு ஆசிரியர்கள் தலைசுமையாக
பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய
நிலையும் உள்ளது.
ஒரு மாணவருக்கு தொடக்க கல்வியில்
கற்பிக்கப்படும் அடிப்படை கல்வி தான் மிக
முக்கியம். ஒவ்வொரு பள்ளிக்கும்
எவ்வளவு பொருட்கள் தேவை என
கணக்கிட்டு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே
அரசு வழங்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment