அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட
ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
ஓவர்சீயர் பணி
மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி,
மாற்றுத்திறனாளி. இவர்,
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த
மனுவில்
கூறி இருந்ததாவது:–
நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில்
என்ஜினீயரிங் படித்து முடித்தேன்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்துள்ளேன்.
வேலை உறுதி அளிப்பு திட்டத்தை
செயல்படுத்த வட்டார
வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர்
பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த
பணியிடங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட
ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே,
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க
உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில்
எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட
வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இட ஒதுக்கீடு
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல்
தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, “சட்டத்தில்
கூறப்பட்டுள்ள இட
ஒதுக்கீட்டு கொள்கையை அரசு கடைபிடிக்க
வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
எதிர்காலத்தில் காலிப்
பணியிடங்களை நிரப்பும்
போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட
ஒதுக்கீடு வழங்க வேண்டும்“
என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment