Sunday, January 19, 2014

டிரான்ஸ்பர்க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்! - தினமலர் நாளிதழ்

''தொடக்கக் கல்வித் துறையில்,
இடைநிலை ஆசிரியர்கள்,
புலம்பி தவிக்கிறாங்க...'' என,
 கடைசி மேட்டருக்குள் நுழைந்தார்,
அந்தோணிசாமி.
''விவரமா சொல்லும் வே...'' என்றார்
அண்ணாச்சி.
''கடந்த, 2007-2008ம் ஆண்டில், மாநில
பதிவு மூப்பு அடிப்படையில், தொலைதூர
மாவட்டங்களில், 7,000 பேர் பணியில்
சேர்ந்தாங்க...
''இவங்களுக்கு, தமிழக அரசு, பல ஆண்டா,
பணி மாறுதல் நடத்தல... சுப்ரீம் கோர்ட்
வரை போனதால, அவங்களுக்கு ஆறுதலான
தீர்ப்பு கிடைச்சுது...
''ஆனா, அதையும் கல்வித்
துறை கண்டுக்கல... இப்போ,
மறைமுகமா ஒரு, 'டீலிங்' நடக்குது... சொந்த
மாவட்டத்தில், 'போஸ்டிங்' வேணும்ன்னா, 3
முதல், 4, 'லகரம்' வரை, கைமாறுது...
''மதுரையில் மட்டும், இந்த, 'டீலிங்'குல, 50
போஸ்டிங் முடிஞ்சிருக்கு...'' என்று,
அந்தோணிசாமி கூற, ''அப்போ, மாநிலம்
முழுவதும், எத்தனை,
போஸ்டிங்குன்னு கணக்கு போட்டா,
தலை சுத்துது பா...'' என, 'கமென்ட்'
அடித்தார் அன்வர்பாய்.
நண்பர்கள் அனைவரும் கிளம்பினர்; பெஞ்ச்
அமைதியானது.

No comments:

Post a Comment