மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக்
கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழககால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளியின்
தரத்தை உயர்த்துவதற்காக
பல்வேறு திட்டங்களை அரசு செயல்
படுத்தி வருகிறது. கூடுதல்
கட்டிடங்கள், கழிவறை, குடிநீர் வசதி,
சுற்றுச்சுவர் உள்ளிட்ட
அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக
நிதியை ஒதுக்கி வருகிறது. மேலும்,
பள்ளிகளில் படிக்கும் மாணவ
மாணவியருக்கு பயன்படும் வகையில் 14
வகையான இலவச திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
சுமார் 92 லட்சம் பேர்
பயன்பெறுகின்றனர்.
அந்த வகையில், கடந்த
ஆண்டு பட்ஜெட்டில், பள்ளிக் கல்விக்கென
ரூ.16 ஆயிரம்
கோடியை அரசு ஒதுக்கியது.
இந்தாண்டு 19 ஆயிரம் கோடி ஒதுக்க
அரசு முடிவு செய்துள்ளதாக
தெரிகிறது. அதற்காக கூடுதலாக
இலவச லேப்டாப், நோட்டுகள், காலணிகள்,
ஜியாமென்டரி பாக்ஸ், கலர் பென்சில்கள்
வழங்கப்படுகிறது. அத்துடன்
கூடுதலாக மேலும் சில
பொருட்களை வழங்க
அரசு ஆலோசித்து வருகிறது.
அதில் அறிவியல் மற்றும்
கணக்கு பாடப்பிரிவுகளை எடுத்து
படித்து வரும்
மாணவர்களுக்கு பயனளிக்கும்
வகையில், இலவச சயின்ட்டிபிக்
கால்குலேட்டர் குறித்த
அறிவிப்பு வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல்
நிதி மற்றும் இலவச சலுகைகள் குறித்த
அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில்
வெளியாகும் என்றும் தெரிகிறது.
No comments:
Post a Comment