Monday, February 24, 2014

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில்,
பல்வேறு மாற்றங்களை, தேர்வுத்
துறை செய்துள்ளது.
தற்போது, விடைத்தாள்கள் திருத்தும்
பணியையும், விரைந்து முடிக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள்
உருவாக்கப்பட்டு உள்ளன;
கடந்தாண்டை விட, 36 மையங்கள்
அதிகரித்து உள்ளன. திருத்தும்
பணி துவங்கி, 10 நாட்களுக்குள்
முடிக்க நடவடிக்கை எடுக்க, தேர்வுத்
துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, கல்வித்
துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
""கடந்த ஆண்டு, விடைத்தாள்களில்,
மறுகூட்டல் நடத்தியதில், சில
குளறுபடிகள் நடந்தது. இதை தவிர்க்க,
பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுத்த
ஆசிரியர்களை மட்டுமே வைத்து,
விடைத்தாள்களை திருத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,''
என்றார்.

No comments:

Post a Comment