Monday, February 03, 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகள் தீவிரம் : இந்த ஆண்டு கூடுதல் மையங்கள்

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலகம் செய்து வருகிறது.
கடந்த
ஆண்டை விட இந்த
ஆண்டு கூடுதல் மையங்களில்
மாணவர்கள்
தேர்வு எழுதுகின்றனர்.
இது சம்பந்தமாக
இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தல்
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால்
முன்கூட்டியே பிளஸ் 2 தேர்வை நடத்தி முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்
துறை சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்
தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி முதல், 25ம்
தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 7ம் தேதி,
செய்முறைத் தேர்வுகள் துவங்க உள்ளன.
தேர்வின் போது, நடைபெறும்
முறைகேடுகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித்
துறையானது முன் எப்போதும் இல்லாத
அளவில் தற்போது விரிவான
ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, தேர்வு எழுத உள்ள, மாணவர்களின்
பெயர், புகைப்படம்,
பதிவெண் ஆகிய விவரங்கள்
விடைத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், 40 பக்கம் கொண்ட விடைத்தாள்களும்
வழங்கப்பட உள்ளன. முதன் முறையாக
செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள்
உடனுக்குடன் ஆன்-லைனில் பதிவேற்றம்
செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர் மற்றும்
விருத்தாசலம் என
இரண்டு கல்வி மாவட்டங்களில் உள்ள, 187
பள்ளிகளைச் சேர்ந்த 29, 196 மாணவ,
மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட
விவரங்கள் ஆன்-லைனில்
பதிவு செய்யப்பட்டு, பள்ளிக்
கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்
அதில், திருத்தம் மேற்கொள்ள இன்று (3ம் தேதி)
வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எழுத வசதியாக,
இரு கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம்
72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது கடந்தாண்டை விட 8 மையங்கள்
கூடுதலாகும்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கும்
அறைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்
உத்தர விடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்
மாணவர்களின் விவரங்களும் தயார்
நிலையில் உள்ளன.
தலைமை ஆசிரியர்களுக்கு
இன்று ஆலோசனை கூட்டம்
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான
முன்னேற்பாடுகள் குறித்து கடலூரில்
இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
முதன்மைக் கல்வி அதிகாரி ஜோசப்
அந்தோணிராஜ் தலைமையில் நடக்கும்
கூட்டத்தில், 187 பள்ளிகளைச் சேர்ந்த
தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில், செய்முறைத் தேர்வின் போது,
மாணவர்களுக்கு தேவையான
அடிப்படை வசதிகள், கண்காணிப்பாளர்கள்
மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன
என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment