Friday, February 14, 2014

பிளஸ்2 தனித்தேர்வர்கள் இன்டர்நெட்டில் ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்: திருச்சி முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்கள் இன்டர்நெட் மூலம் ஹால்டிக் கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று திருச்சி முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு: பிளஸ்2
பொதுத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் பிப்.13 முதல்
16ம் தேதி வரை <ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ> என்ற
இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட
அனுமதி சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வு மற்றும்
செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்
தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக
எடுத்து தேர்ச்சியடையாதவர்கள் கண்டிப்பாக
செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு,
எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய
வேண்டும்.
அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட
செய்முறை மட்டும் உள்ள பாடத்தில்
தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும்
தேர்விற்கு வருகை தர வேண்டும்.
முதன்முறையாக பிளஸ்2 தேர்வெழுத
விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள்
பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடத்தின் தாள்
இரண்டு மற்றும் பகுதி 3ல்
சிறப்பு மொழி எழுதும் தேர்வர்கள் கேட்டல் அல்
லது பேசுதல் திறன் தேர்வு களை கண்டிப்பாக
செய்ய வேண்டும். மொழிப்பாடங்களில் கேட்டல்
அல்லது பேசுதல் திறன் தேர்வு மற்றும்
செய்முறைத்தேர்வு மையத்தின் முதன்மைக்
கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள
வேண்டும். உரிய தேர்வுக்கூட
அனுமதி சீட்டின்றி எந்த ஒரு மாண வரும் தேர்
வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தக்கல்
திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்
விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment