பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கைபேசிகளை நிறுத்தம்
செய்து பாதுகாப்பாக வைப்பதோடு, அவசர தொடர்புக்கு தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு
தேர்வுத்துறை இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.
செய்து பாதுகாப்பாக வைப்பதோடு, அவசர தொடர்புக்கு தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு
தேர்வுத்துறை இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்2
அரசு பொதுத் தேர்வு மார்ச் 3-ம்
தேதி தொடங்கி, தொடர்ந்து 25-ம்
தேதி வரையில் நடத்தப்பட இருக்கிறது.
இத்தேர்வை மாநிலத்தில் மொத்தம் 12
லட்சம் பேர்
பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள்.
இதில், விருதுநகர் மாவட்டத்தில்
விருதுநகர்- 8177 பேரும்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-7296 பேரும்,
அருப்புக்கோட்டை-7216 பேரும் என
மொத்தம் 22689 மாணவ, மாணவிகள்
பங்கேற்க இருக்கிறார்கள்.
இத்தேர்வில் நிகழாண்டு முதல் புதிய
நடைமுறை பின்பற்றப்படவும்
இருக்கிறது. அதேபோல், வினாத்தாள்
கொண்டு செல்வதற்கும்,
விடைத்தாள்களை சேர்ப்பதற்குமான
பணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவை பிளஸ்2 தேர்வில் முறைகேடுகள்,
ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடித்தல்
போன்றவைகளை தடுப்பதற்காக
அரசு தேர்வு துறை இயக்குநரகம்
குறிப்பிட்ட
நடைமுறைகளை பின்பற்றவும்
உத்தரவிட்டுள்ளது.
முதன்மைக் கண்காணி்ப்பாளர் வழித்தட
அலுவலருடன்
முன்கூட்டியே கலந்துபேசி,
வினாத்தாள்கள்
மையத்திற்கு வருவதற்கு முன்பே,
தேர்வு மையத்திற்கு வந்து விட
வேண்டும். அதேபோல், வழித்தட
அலுவலர் வினாத்தாள்
கட்டுக்களை முதன்மைக்
கண்காணி்ப்பாளரிடம் ஒப்படைக்கும்
போது, தேர்வு மையம், நாள், பாடங்கள்
ஆகியவைகளை கட்டாயம்
சரிபார்த்து விட்டு,
அதையடுத்து துறை அலுவலருடன்
கலந்தாய்வு செய்து பாதுகாப்பான
அறையில் வைத்து பூட்ட வேண்டும்.
வினாத்தாள்களை பெற்றுக்
கொண்டதற்கு வழித்தட அலுவலரிடம்
உரிய படிவத்தில் ஒப்புகை அளிக்க
வேண்டும். பின்னர் 8.15 மணி முதல், 9
மணிக்குள் விடைத்தாள்கள் மற்றும்
வருகை படிவத்துடன் கூடிய
உறை கொண்ட
துணிப்பைகளை தேர்வு எண்
தெரியாத நிலையில் மேஜையில்
கவிழ்த்து வைக்கவும்.
அறைக்கண்காணிப்பாளர்கள்
விடைத்தாள்களில் உள்பக்கங்களில் மேல்
பகுதியில் இரண்டு தாள்கள் இணையும்
இடத்தில் ரப்பர்
முத்திரை இடுவதற்கு தயராக,
முத்திரையை எடுத்து வைத்திருக்க
வேண்டும்.
தேர்வு மையத்தில் காலை 8
மணி முதல் மாலை 2 மணி வரையில்
செல்பேசியை நிறுத்தம் செய்து,
பணிக்கு வந்திருக்கும் அலுவலர்களிடம்
கைபேசிகளை மொத்தமாக
வாங்கி தேர்வு கட்டுப்பாட்டு அறையில்
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
அவசர தொடர்புக்காக
தரைவழி தொலைபேசியை மட்டுமே
பயன்படுத்த வேண்டும். அறைக்
கண்காணிப்பாளர்கள்,
தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு உரிய
நேரத்தில்
வருகை புரிந்து விடைத்தாள்
அடங்கிய உறைகளை எடுத்து ரப்பர்
முத்திரை இடுவதை கண்காணிக்க
வேண்டும்.
சரியாக 8.45 மணி முதல் 9.30 மணிக்கும்
வினாத்தாள்
கட்டுக்களை பாதுகாப்பான அறையில்
இருந்து வெளியே எடுத்து பிரித்து,
ஒவ்வொரு அறையிலும்
எண்ணிக்கைகேற்ப உறைகளில்
போட்டு கொடுத்து,
ஒவ்வொருவரிடமும் அறைவாரியாக
வருகைப்பதிவேட்டில் கையொப்பம் பெற
வேண்டும். அறை எண் வாரியாக
அறைக்கண்காணிப்பாளர்களின்
பெயர்களை கணினியில்
பதிவு செய்து படிவங்கள் தயாரிக்க
வேண்டும். தேர்வு முடிந்த பின்னர்
விடைத்தாள்கள்
உறையினை ஒப்படைக்கும்
போது சரியான
அறைக்கெதிரே விடைத்தாள்
எண்ணிக்கையை குறிப்பிட்டு ஒப்பம்
பெற வேண்டும்.
10.15 மணிக்கு பின் முதன்மைக்
கண்காணிப்பாளர், துறை அலுவலர்
ஒவ்வொரு தேர்வு அறைக்கும்
சென்று வினாத்தாள் உறை,
வருகை புரியாதவர்கள் விடைத்தாள்,
வினாத்தாள்
ஆகியவற்றை சேகரித்து தேர்வு
கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வர
வேண்டும். அதோடு வராதவர்களின்
விடைத்தாளில்
முகப்புச்சீட்டுக்களை மட்டும்,
முழுமையாக தனியாக
பிரித்து தேர்வு எண் வரிசையில்
அடுக்கி தனி உறையில் பாதுகாப்பாக
வைக்க வேண்டும்.
தேர்வு முடிந்தவுடன் விரைவாக
கட்டுப்பாடு அறைக்கு வருவதை
உறுதி செய்வதோடு, மாணவ,
மாணவிகள் கடைசியாக எழுதிய
விடைத்தாளில் கடைசியாக எழுதிய
வரியின் கீழே தேர்வுத் துறையின்
ரப்பர்
முத்திரையை இடுவதை சரிபார்க்க
வேண்டும். இக்குறிப்பிட்ட
முத்திரைக்கு பின் விடைகள் ஏதும்
எழுதப்படவில்லை என்பதை உறுதி
செய்யப்படும். இதுபோன்ற
நடைமுறைகளை கட்டாயம்
பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்கு
தேர்வுத்துறை இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment