Saturday, February 22, 2014

குரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி

குரூப் - 4தேர்வு முடிவு வெளியாவதில்,
ஏழு மாதங்களாக இழுபறி நீடித்து வருவதால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும்,தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.,) மீது, கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கடந்த ஆண்டு, ஆக., 25ல், குரூப் - 4
தேர்வு நடந்தது. 5,566 காலி இடங்களை நிரப்ப
நடந்த தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன்
முடிவு, டிசம்பருக்குள் ?வளியாகும் என,
தேர்வர் எதிர்பார்த்தனர்.
தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணனும்,
"இதோ, விரைவில் வருகிறது...
ஜனவரி இறுதிக்குள் ?வளியிடுவோம்...
பிப்ரவரியில் வந்துவிடும்' என, செல்லும்
இடம் எல்லாம், பேட்டி கொடுத்தார். ஆனால்,
முடிவு மட்டும் வந்தபாடில்லை. இந்த
மாதத்துடன், ஏழு மாதம் முடியப்போகிறது.
ஆனாலும், தேர்வு முடிவு, எப்போது வரும் என,
தெரியாத நிலை உள்ளது. இம்மாத
இறுதிக்குள்
வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், மார்ச், 15
தேதிக்குப்பின் ?வளியாக
வாய்ப்பு உள்ளது எனவும், தேர்வாணைய
வட்டாரம் தெரிவிக்கிறது.
முடிவு ?
வளியாவதில்,தொடர்ந்து இழுபறி நீடிப்பதால்,
தேர்வாணையம் மீது, தேர்வெழுதிய, 12 லட்சம்
பேரும், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment