Monday, February 03, 2014

5ம் தேதி இல்லாத வெயில், 26ம் தேதி வருமா? : தேர்வு நேரம் மாற்றத்தில் ஆசிரியர்கள் கேள்வி

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேரத்தை,
வழக்கம் போல், காலை, 10:00
மணிக்கு மாற்றக் கோரி,
அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்,
மாநிலம் முழுவதும், 5ம் தேதி, ஆர்ப்பாட்டம்

நடத்துகிறது. பிளஸ் 2 தேர்வு, வழக்கம்போல்,
காலை, 10:15 மணிக்கு துவங்குகிறது.
ஆனால், 10ம் வகுப்பு தேர் வு மட்டும்,
ஒரு மணி நேரம் முன்னதாக, காலை,
9:15க்கு துவங்குகிறது.
மன உளைச்சல்: மார்ச், 26ம் தேதி முதல் ஏப்ரல், 9
வரை, 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்த
நேரத்தில், வெயில் இருக்கும் என்பதால்,
சிறுவயது மாணவர்கள் பாதிக்கக்
கூடாது என்பதற்காக, முன்கூட்டியே,
தேர்வு துவங்க,
அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால்,
கிராமப்புற மாணவர்களுக்கு, இது, பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆசிரியர்கள்
கூறுகின்றனர். "காலையில், கடைசியாக
ஒரு முறை, பாடப் பகுதிகளை திருப்பி பார்க்க
கூட நேரம் இருக்காது. எழுந்த உடன்,
பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், பல பள்ளிகள், தொலைவாக உள்ளன.
பஸ் பிடித்து தான், பள்ளிக்கு செல்ல
வேண்டும். இதனால்,
மன உளைச்சல் ஏற்படும்' என, ஆசிரியர்கள்
கூறுகின்றனர். இதுகுறித்து,
அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்
செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
மார்ச், 25ல் பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம்
வகுப்பு தேர்வு துவங்கும், மறுநாள், 26ல்,
கடும் வெயில் வந்து விடுகிறதா? ஆங்கிலேய
ஆட்சி காலத்தில் இருந்து, காலை, 10:00
மணிக்குத் தான், தேர்வு துவங்குகிறது.
ஆர்ப்பாட்டம் : இப்போது, திடீரென,
நேரத்தை மாற்றிவிட்டனர். இதனால்,
கிராமப்புற மாணவர்களுக்கு, கண்டிப்பாக
பாதிப்பு ஏற்படும். நேரத்தை மாற்றியது,
முதல்வர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய
முடியாது என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேரத்தை மாற்ற வலியுறுத்தி, 5ம் தேதி,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்,
மாலை, 5:30 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment