மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது
சார்பான அறிவிப்பு கடந்தஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது
வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த
வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில்
இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும் மத்திய நிதியமைச்சர்
தற்பொழுது வெளிநாட்டு பயணம்
மேற்கொண்டு வருகிற 26ம்
தேதி இந்தியா வருகிறார்.
பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும்
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான
முறையான அறிவிப்பு வெளியாகும்
என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10%
அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும்
அன்றைய தினமே வெளியாகும்
என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்
ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும்
பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல்
வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான
அறிவிப்பு வெளியாகும் என்பதால்,
அதற்கு முன்னரே மேற்காணும்
அறிவிப்பு வெளியாகும்
என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்
நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம்
என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக
அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment