கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர்
ஜெயலலிதா,மருத்துவர் நியமனத்தில்
இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது
என்று தெரிவித்தார்.ஜெயலலிதா,மருத்துவர் நியமனத்தில்
இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது
மேலும், சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில்,
83 பேரில் 72 மருத்துவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பேர்
அரசு மருத்துவமனை மருத்துவரால்
நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.
எஸ்,சி., எஸ்.டி, எம்.பி.சி, பிசி மற்றும்
சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத
மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக
அறிவிக்கப்படுவர்.ஆசிரியர் தகுதி தேர்வில்
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத
சலுகை மதிப்பெண் வழங்கப்படும்.
இலங்கைக்கு எதிராக
சட்டசபை தீர்மானங்களை மத்திய
அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்
சாட்டிய அவர், வரும் மக்களவை தேர்தலில்
ஆட்சி மாற்றம்
ஏற்பட்டு வெளியுறவுகொள்கையில் மாற்றம்
ஏற்படும்.
வெளியுறவுக்கொள்கையை வகுக்கும்
சக்தியாக அதிமுக இருக்கும்
என்று நம்பிக்கைதெரிவித்தார்.
No comments:
Post a Comment