Saturday, February 01, 2014

அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
அரசு பொது தேர்வு, அடுத்த மாதம்
துவங்க உள்ளது. இதில்,

மாணவர்கள் தேர்வு எழுத, எதிர்
கொள்ள வேண்டிய முறைகள்
குறித்து, இன்று, அனைத்து உயர்நிலை,
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
அரசு பொது தேர்வில், 8. 50 லட்சம் மாணவர்கள்
எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26
ல் துவங்கி, ஏப்.,9 ல் முடிகிறது. பிளஸ் 2
விற்கு மார்ச் 3 ல் துவங்கி, 25 ல் முடிகிறது.
இவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்.,10 ல்
முதல் 25 ல் முடிகிறது.
பொது தேர்வில் மாணவர்கள், விடைத்தாள்
பேப்பரை மாற்றி, "பிட்' அடிப்பதை தடுக்க, 40
பக்கம் கொண்ட "மெயின் சீட்' மட்டுமே கொடுக்க,
கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுபோல்,
விடைத்தாள் மெயின் சீட்டில் , மாணவரின்
போட்டோ, ரகசிய குறியீட்டு எண், பார் கோடு எண்
கொடுக்க உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து,
பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்,
அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள்,
உதவியாளர்களுக்கு,
கருத்துரை வழங்கி உள்ளார். இதை, இன்று,
அனைத்து உயர்நிலை,
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
அந்தந்த கல்வி மாவட்டத்தில் கூட்டம்
நடத்தி ,எடுத்து கூற உள்ளனர்.
இதை தொடர்ந்து, தேர்வு குறித்த
விளக்கங்களை,மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள்
விளக்க
உள்ளனர்.

No comments:

Post a Comment