ஐ.ஏ.எஸ்.,
தேர்வு எழுதுவோருக்கு, மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. அதன்படி, பொதுப் பிரிவில் உள்ளவர்கள், இனி, ஆறு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர்கள், ஒன்பது முறையும் தேர்வெழுதலாம்.
தேர்வு எழுதுவோருக்கு, மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. அதன்படி, பொதுப் பிரிவில் உள்ளவர்கள், இனி, ஆறு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர்கள், ஒன்பது முறையும் தேர்வெழுதலாம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற
பணிகளுக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்வதற்காக,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
சார்பில், ஆண்டு தோறும்,
தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான
முதன்மை தேர்வு, வரும் ஆகஸ்ட், 24ல்
நடக்கிறது. பொதுப் பிரிவுகளை சேர்ந்தவர்கள்,
தற்போதுள்ள விதிமுறைப்படி,
நான்கு முறை மட்டுமே, இந்த தேர்வை எழுத
முடியும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்
சேர்ந்தவர்கள், ஏழு முறை தேர்வு எழுத
முடியும். இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., பணிகளில்
சேருவதையே லட்சியமாக உடைய பலர்,
'தேர்வு எழுதுவதற்காக, தற்போதுள்ள
கட்டுப்பாடுகளை தளர்த்தி, கூடுதலாக,
தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்க
வேண்டும்' என, நீண்ட காலமாக
வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து,
அவர்களின் கோரிக்கையை ஏற்று, 'பொதுப்
பிரிவில் உள்ளவர்கள், இனி, ஆறு முறையும்,
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர்கள்,
ஒன்பது முறையும், இனி தேர்வெழுதலாம்'
என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment