ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),
'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அட்டவணையில், சிறிய மாற்றம்
செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில்,'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அட்டவணையில், சிறிய மாற்றம்
செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55
சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார்.
இதற்கு ஏற்ப, டி.இ.டி., தேர்வில் எடுக்கும்
மதிப்பெண்ணை, 'வெயிட்டேஜ்' அடிப்படையில்
கணக்கிடும் முறையில், சிறிய மாற்றம் செய்து,
பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்று,
அரசாணை பிறப்பித்தார். அதன்படி, டி.இ.டி.,
தேர்வில், தேர்வர் எடுக்கும் மதிப்பெண்,
'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண்
அளவு விவரம் வருமாறு:
* 90 சதவீதம், அதற்கு அதிகமாக பெற்றால் - 60
மதிப்பெண்
* 80 - 90 சதவீதம் வரை - 54
* 70 - 80 சதவீதம் வரை - 48
* 60 - 70 சதவீதம் வரை - 42
* 55 - 60 சதவீதத்திற்குள் எடுத்தால் - 36
கடந்த, 2013ல் நடந்த தேர்வு மற்றும் வருங்காலத்தில்
நடக்கும் தேர்வில், மேற்கண்ட முறையில் மதிப்பெண்
கணக்கிடப்படும் என, அரசாணையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டி.இ.டி., தேர்வு, 150
மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. இதில், 60
சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால், தேர்ச்சி என்ற
நிலை, முதலில் இருந்தது. தற்போது, இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத
சலுகை வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள், 82
மதிப்பெண் எடுத்தாலே, தேர்ச்சி பெறுவர். இதில்,
150க்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண், மேற்கண்ட
அட்டவணைப்படி, 60க்கு, கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும். இந்த மதிப்பெண்ணுடன், பிளஸ் 2,
பட்ட படிப்பு, பி.எட்., மற்றும் ஆசிரியர்
பயிற்சி டிப்ளமா ஆகியவற்றில், தேர்வர் எடுத்த
மதிப்பெண் அடிப்படையில், அதிகபட்சமாக, 40
மதிப்பெண் தரப்படுகிறது. 60 + 40 என, 100
மதிப்பெண் அடிப்படையில், இறுதியாக
தேர்வு பட்டியல் வெளியிடப்படுகிறது.
படிப்புகளுக்கான, 40 மதிப்பெண்
கணக்கிடுவதற்கும், தனி அட்டவணை,
ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment