ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது:
இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் விளிம்பு நிலையில் இருக்கும் பிரிவினர் தங்களது பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் கூட நாளிதழ்கள் உள்ளிட்ட வெளி உலகத் தொடர்பு இல்லாமலேயே வளரும் சூழல் உள்ளது. எனவே, அவர்களுக்கு மதிப்பெண் சலுகை தேவையாக உள்ளது.
இந்த நியாயமான கோரிக்கையை புரிந்துகொண்டு அரசுக்குக் கடிதம் எழுதிய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு நன்றி.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்
No comments:
Post a Comment