அரசு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும்
தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின்
சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின்
சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
இதில், ஆசிரியர் தகுதித்
தேர்வை ரத்து செய்து, ஆர்டிஇ
சட்டப்படி என்சிடிஇ மூலம் பயிற்சிகள்
அளிக்கப்படவேண்டும்.
பங்களிப்பு முறை ஓய்வூதியத்
திட்டத்தினை கைவிட்டு,
காலமுறை ஓய்வூதிய முறையே தொடரப்பட
வேண்டும். அரசாணை எண் 231, நாள்
02.08.2010ன்படி மொழி ஆசிரியர்கள்,
தொழிலாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்,
கலை ஆசிரியர் பணியிடங்கள்
வழங்கப்படவேண்டும்.
அரசின் விலையில்லாப் பொருட்கள் உரிய
காலத்தில் வழங்கப்பட இளநிலை உதவியாளர்,
அலுவலக உதவியாளர், காவலர் போன்ற
ஆசிரியரல்லாத பணியிடங்கள் வழங்கப்பட
வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment