Saturday, February 22, 2014

முதுகலை தமிழாசிரியர் பணிக்கு ஒன்பது பேர் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் பணியாற்ற
ஒன்பது முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

திருச்சி வருவாய் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 18 முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கவுன்சிலிங்
நேற்று திருச்சி சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
இதில், அனைத்து கல்வி சான்றிதழ்,
தேர்வு கூட நுழைவு சீட்டு ஆகியவை சரிபார்க்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேருக்கு பணி நியமன
உத்தரவை சி.இ.ஓ., செல்வக்குமார்
வழங்கினார். மீதமுள்ள ஒன்பதுபேர்
வேறு மாவட்டத்தில்  கலந்தாய்வில் மூலம் பள்ளிகளை தேர்வு செய்தனர்.

No comments:

Post a Comment