Monday, February 24, 2014

நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!

ஏழு அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும்,
நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி அறிவித்துள்ளது.
மாநில
பொதுச்செயலர் ரெங்கராஜன்,
திருச்சியில் நிருபர்களிடம்
கூறியதாவது: கடந்த, 2006ல்,
ஆறாவது சம்பளக்குழு அமல்
படுத்தப்பட்டது; அதன்படி, தொடக்கப்
பள்ளி ஆசிரியருக்கு, 13,500 ரூபாய்,
சம்பளமாக வழங்க வேண்டும்; ஆனால், 8,000
ரூபாய் தான் வழங்கப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம்
செய்த, முதல்வர் ஜெயலலிதா,
"ஆறாவது சம்பளக்குழு
முரண்பாடுகளை களைவேன்' என்றார்.
இதற்காக, மூவர்
சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. ஆனால்,
தற்போது, கோரிக்கை நிறைவேற்ற,
கால அவகாசம் வேண்டும் என்கின்றனர்.
ஏழு அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி,
நாளை, ஒரு நாள்
உள்ளிருப்பு வேலை நிறுத்தமும், 26ம்
தேதி, அடையாள வேலை நிறுத்தமும்,
கூட்டணி சார்பில் நடக்கிறது. இவ்வாறு,
அவர் கூறினார்.

No comments:

Post a Comment