பல மாவட்டங்களில், கேள்வித்தாள்
கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,
பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல்,2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,
பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல்,2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும்
மாணவ, மாணவியர், மத்திய அரசின்
கல்வி உதவித்
தொகையை பெறுவதற்காக,
இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய
திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத்
துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத
இருந்தனர். கடைசி நேரத்தில்,
கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை,
நேற்றிரவு வரை,
தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை.
இதனால், இன்று காலை, 10:00
மணிக்கு நடக்க இருந்த தேர்வை, பிற்பகல்,
2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத்
துறை அறிவித்துள்ளது. இந்த விவரம்,
முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக,
இன்று காலை,
மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment