Sunday, February 23, 2014

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை?

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2
மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்வி உதவித் தொகை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்
பிளஸ் 2 மாணவ,மாணவிகளின் இடைநிற்றல்
கல்வியை தவிர்க்க,
ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.2
ஆயிரம் அரசு வழங்குகிறது.
இத்தொகை ஒவ்வொரு
கல்வியாண்டின் இறுதியில் அவரவர் வங்கிக்
சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். 2013-14ம்
கல்வியாண்டு முடியும் தருவாயில், அதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 5
ஆயிரத்து 660 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகள் பெயர்,
வங்கி சேமிப்பு கணக்கு எண் விவரங்களை நேரில்
வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னரே இடை நிற்றல்
உதவித் தொகையை மாணவர்களின் வங்கிக்
கணக்கில் சேர்க்க, அதிகாரிகள் துரித
நடவடிக்கை எடுத்துள்ளதாக
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment