Tuesday, February 25, 2014

டி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி.,
தேர்வு பயிற்சி அளிக்க,
அரசு உத்தரவிட்டிருந்தது.
தற்போது,
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும்,
தேர்வில் பங்கேற்க அனுமதித்தாலும், குழப்பம்
தீரவில்லை. அவர்களையும், இலவச
பயிற்சி வகுப்பில் சேர்த்துக்கொள்வதா,
இல்லையா என்ற குழப்பம்,
பயிற்சி இயக்குனரகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
எனினும், அவர்கள், இலவச பயிற்சி பெற,
முதன்மை கல்வி
அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்களில்,
பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என,
இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment