பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது.
அதனால்அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
அதைப் போக்குவதற்காக ஆர்எம்எஸ்ஏ(மத்திய
இடைநிலைக் கல்வி இயக்கம்),
எஸ்இஆர்டி(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககம்) ஆகியவற்றின் மூலம்
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக
10ம் வகுப்புகளில் பாடம் நடத்தும்
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
. இந்த பயிற்சி சென்னையில் 12, 13ம்
தேதிகளில் நடக்கிறது.
அந்த ஆசிரியர்கள் மாணவர்களின்
தேர்வு குறித்த பயம், மன அழுத்தம், மன
உளைச்சல்
ஆகியவற்றை போக்கி நல்வழிப்படுத்துவார்கள்.
மேலும், பொதுத் தேர்வுகளை எப்படி எதிர்
கொள்வது உள்ளிட்ட விஷயங்களையும்
ஆசிரியர்கள் விளக்கி மாணவர்களின்
தேர்வு பயத்தை போக்குவார்கள். இந்த
பயிற்சிக்காக மொத்தம் உள்ள 67
கல்வி மாவட்டங்களில்
ஒரு மாவட்டத்துக்கு தலா 2 ஆசிரியர்கள் வீதம்
134 பேர் சென்னைக்கு வரவழைத்து பயிற்சி
அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 45 பேர் இந்த
பயிற்சியில் பங்கேற்பார்கள். பயிற்சி பெறும்
ஆசிரியர்கள் உடனடியாக மற்ற
ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.
No comments:
Post a Comment