Monday, February 03, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வலியுறுத்தல்

2003-04-ம் கல்வியாண்டு முதல்
தொகுப்பூதியத்தில் நியமனம்செய்யப்பட்ட
முதுநிலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுக்
குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர
தீர்மானங்கள்:
முதுகலை ஆசிரியர்களுக்கான தர
ஊதியத்தை ரூ. 4,800-லிருந்து ரூ. 5,100 ஆக
உயர்த்துவதுடன், பணியின் முக்கியத்துவம்
கருதி தனிப்படியாக ரூ. 1,000 வழங்க
வேண்டும். ஆதிதிராவிடர் நலப் பள்ளி, கள்ளர்
சீரமைப்புப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள்
அலகு விட்டு அலகு மாற நிரந்தர
ஆணை வழங்க வேண்டும். அரசு உதவிப்
பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின்
வைப்பு நிதி முன்பணம், ஈட்டிய
விடுப்பு மற்றும் ஊதியக் குழு நிலுவைத்
தொகை சார்நிலைக் கருவூலம் மூலம் அளிக்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
1987-88 கல்வியாண்டில் ஒப்பந்த
அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல்
பணிவரன்முறை செய்ய வேண்டும்.
அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில்
தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான
விதியில் தகுதி மற்றும் திறமை என்ற
சொல்லை நீக்க வேண்டும்.
அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் 30
ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும்
சிறப்பு வளர் ஊதியம் வழங்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணியில் நிகழ்
கல்வியாண்டு முதல் விடைத்தாள்
ஒன்றுக்கு ரூ. 20 உயர்த்தி வழங்க வேண்டும்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் வே.
மணிவாசகன் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில், பொருளாளர் திருஞானகணேசன்,
மாநில மகளிர் அணிச் செயலர் வசந்தா,
திருவாரூர் மாவட்டத் தலைவர் நடராசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர

No comments:

Post a Comment