மேனிலைப்பள்ளி பொதுத் தேர்வுகளுக்காக தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பெற்றுக்கொள்ள ஞாயிற்றுக்கிழமையே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவடட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவ்வாண்டில் ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இணையதளத்திற்கு சென்று தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதன்முறையாக மேனிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தேர்வர்கள் திறன் தேர்வுகளை கண்டிப்பாக செய்வதோடு, செய்முறை தேர்வுகள் குறித்த விபரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டுமெனவும், உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டின்றி எந்த தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், தட்கல் திட்டத்திóன்கீழ் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிóத்துள்ளார்
No comments:
Post a Comment