நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது.
தேர்வு விடை தாள்கள், அந்தந்த
மாவட்டங்களில் திருத்தப்படுவதில்லை.
மற்ற
மாவட்டங்களுக்கு அவை அனுப்பப்படுகின்றன.
இதற்கான மையங்களில் வரும் 24ம்
தேதி முதல் விடைத்தாள் திருத்தும்
பணி தொடங்குகிறது. காலை 8.30 முதல்
மதியம் 12.30 மணி வரை, மதியம் 1.30 முதல்
மாலை 5.30 மணி வரை என இரண்டு பிரிவாக
விடைத்தாள் திருத்தப்படும். இதேபோல் மற்ற
மாவட்டங்களிலும் விடைத் தாள்
திருத்தப்படுகிறது.வரும் 21, 22ம் தேதிகளில்,
முதன்மை கல்வி அலுவலர் தலைமையில்
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்
பங்கேற்கும் பயிற்சி கூட்டம் நடக்கிறது.
இதில், விடைத்தாள் திருத்தும் முறை மற்றும்
மதிப்பெண் வழங்கும்
முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இதன்பின், 24ம் தேதி முதல் விடைத்தாள்
திருத்தும் பணி தொடங்கும். மக்களவைத்
தேர்தல் வருவதால், அதில் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, விடைத்தாள்
திருத்தும் பணியை வரும் 24ல் தொடங்கி,
ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க கல்வித்
துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment