இன்று மாலை தொடக்ககல்வி இயக்குனர்
அவர்களை பல்வேறுபட்ட கோரிக்கைகள்
குறித்து நமதுபொதுச்செயலர்திருமிகு செ.
முத்துசாமி சந்தித்து சுமார்30 நிமிடங்கள்
பேச்சு நடத்தினார்.
அவர்களை பல்வேறுபட்ட கோரிக்கைகள்
குறித்து நமதுபொதுச்செயலர்திருமிகு செ.
முத்துசாமி சந்தித்து சுமார்30 நிமிடங்கள்
பேச்சு நடத்தினார்.
அப்போது பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
முத்துசாமி
-பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு குறித்து தற்போதைய நிலை யாது?
இயக்குனர்-
பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயாரான
நிலையில் மாறுதல் அளித்த
பின்பே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட
வேண்டும் என்ற கோரிக்கை சில சங்கங்களால்
வலியுறுத்தப்பட்டதாகவும்,அதனால்
எவ்வாறு நடத்தலாம் என
தெளிவுறை கேட்டு அரசுக்கு கடிதம்
எழுதப்பட்டதையும்
தங்களுக்கு ஏற்கனவே கூறியதை நினைவு கூர்ந்து .
அரசிடம் இருந்து இன்னும் விளக்கம்
வரவில்லை .என்றார்
முத்துசாமி-
தேர்தல் அறிவிக்கப்பட்டால் பட்டதாரி ஆசிரியர்
கலந்தாய்வு நிலை யாது?
இயக்குனர்:-தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்
தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்தால்
கலந்தாய்வு நடத்தப்பட முடியாது.
முத்துசாமி
-பட்டதாரி ஆசிரியர்
கலந்தாய்வு இவ்வாண்டு நடைபெறாததால்
தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் கலந்தாய்வின்
போது-2013 பேனலைன்
அடிப்படையிலா அல்லது2014 பேனலின்
அடிப்படையில் நடத்தப்படுமா? நாங்கள் 2013
பேனல் அடிப்படையிலேயே நடத்த
வலியுறுத்துகிறோம்.
இயக்குனர்-
தன்கள் நிலை நன்றாக புரிகிறது.
2013ஆம் ஆண்டில் பட்டதாரிஆசிரியர் மாறுதல்
மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு முற்றாக
நடைபெறவில்லை.
அதற்கு
1. இரட்டைப்பட்ட வழக்கு நீதிமன்ற்த்தில் நீண்ட
நாட்கள் முடுவுறா நிலை
2. வழக்கு முடிந்தபின்பு காலிப்பணியிட
விவரம் சேகரப்பதிலும்,பேனல் தயாரிப்பதிலும்
ஏற்பட்ட நடைமுறைக்காரணம்.
3.பதவி உயர்வுநடத்தப்பட தயாரான நிலையில்
அரசிடம் விவரம் கேட்டு கடிதம்
4.தேர்தல் தேதி அறிவிப்பு
போன்ற அசாதாரண சூழ்நிலையால்
பட்டதாரி ஆசிரியர்
கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்ற காரணத்தினால்
சிறப்பு நிகழ்வாக
இவ்வாண்டு ஒதுக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களையும் சேர்த்து
2013 பேனல்
அடிப்படையிலேயே தேர்தலுக்கு பின்னர்
நடத்தப்படும்
பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு கலந்தாய்வு
மட்டும் நடத்தப்படும் என நான் தங்களிடம்
உறுதியாக தெரிவிக்கிறேன். இதர்கான்
நடவடிக்கை என்னால் எடுக்கப்படும் எனவும்
கூறினார்
இயக்குனருக்கு நன்றி கூறி புறப்பட்டனர்
நமது இயக்கப்பொறுப்பாளர்கள்.
No comments:
Post a Comment