தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்க
கல்வித்துறை நேற்று அனைத்து
பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொடக்க கல்வித்துறை இயக்குநர்
இளங்கோவன் நேற்று வெளியிட்ட
சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல்
ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.
இதையடுத்து தொடக்க
நடுநிலை பள்ளிகள் வாக்குச்
சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும் ஆசிரியர்களும் தேர்தல்
பணியில் ஈடுபடுகின்றனர். இதனால்
ஏப்ரல் 23, 24 மற்றும் 25ம் தேதிகள்
பள்ளி விடுமுறை நாட்களாக
அறிவிக்கப்படுகிறது. அந்த 3
நாட்களை ஈடுகட்டும் விதமாக மார்ச் 22,
ஏப்ரல் 5 மற்றும் 26ம் தேதிகளில் பள்ளிகள்
செயல்படும். மேலும் மூன்றாம் பருவத்
தேர்வை ஏப்ரல் 21, 22, 26, 28 மற்றும் 29ம்
தேதிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தவிரவும் ஏப்ரல் 30ம்
தேதி பள்ளி வேலை நாளாகவும்
அறிவிக்கப்படுகிறது. மே 1ம்
தேதி முதல் கோடை விடுமுறை
அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment