Wednesday, March 05, 2014

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்: மேலும் 25 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை

எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ள 25 மாநகராட்சிப் பள்ளிகளை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி
நிர்வாகத்தின் கீழ் உள்ள 25
பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.
வகுப்புகள் (மழலையர் வகுப்புகள்)
புதிதாக தொடங்கப்படும்
என்று மாநகராட்சி பட்ஜெட்டில்
(2014-15) மேயர் சைதை துரைசாமி
தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வகுப்புகள்
தொடங்குவதற்கு வாய்ப்புள்ள
பள்ளிகளின் பட்டியலை தயாரிக்கும்
பணியில் மாநகராட்சி அதிகாரிகள்
ஈடுபட்டிருந்தனர்.
இப்போது பட்டியல்
தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கல்வித்
துறை அதிகாரிகள் கூறியது:
சென்னையில் ஏற்கனவே 40
மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர்
வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவை சிறப்பாக
செயல்பட்டு வருகின்றன.
இப்போது மேலும் 25 பள்ளிகளில்
வகுப்புகள் தொடங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்
சேர்க்கைக்கான பணிகளும்
தொடங்கப்பட்டுள்ளன.
இப்போது எந்தந்த பள்ளிகளில் இந்த
வகுப்புகள் தொடங்கப்படவேண்டும்
என்ற விவரங்கள் அடங்கிய
சுற்றறிக்கை அனைத்து மண்டல
அலுவலர்களுக்கும்,
உதவி கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்கும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பகுதியாக
சென்று மழலையர் வகுப்புகளில்
சேர ஆர்வமுள்ளவர்களின்
விவரங்களை பதிவு செய்ய
கல்வித்துறை பணியாளர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல்
மாதத்தில் இருந்து மாணவர்
சேர்க்கை தொடங்கப்படும்.
மழலையர் வகுப்புகளுக்கான
ஆசிரியர்கள் நியமனம், மாணவர்
சேர்க்கையைப்
பொருத்து நடைபெறும். தேவையான
அளவு ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தெந்த பள்ளிகள்?
பள்ளியின் பெயர் வார்டு
சென்னை தொடக்கப்பள்ளி,
எருக்கஞ்சேரி - 35
சென்னை தொடக்கப்பள்ளி,
சர்மா நகர் - 36
சென்னை தொடக்கப்பள்ளி, பட்டேல்
நகர் - 38
சென்னை தொடக்கப்பள்ளி, சி.பி.டி.
காலனி - 39
சென்னை தொடக்கப்பள்ளி,
அண்ணாநகர், கொருக்குபேட்டை - 41
சென்னை நடுநிலைப்பள்ளி,
விநாயகபுரம் - 43
சென்னை நடுநிலைப்பள்ளி, புதிய
காமராஜ் நகர் - 44
சென்னை நடுநிலைப்பள்ளி,
லாலா குண்டா - 53
சென்னை தொடக்கப்பள்ளி,
கொளத்தூர் - 64
சென்னை தொடக்கப்பள்ளி,
ஜி.கே.எம்.காலனி - 67
சென்னை நடுநிலைப்பள்ளி, பி.பி.
சாலை - 73
சென்னை நடுநிலைப்பள்ளி,
அங்காளம்மன் கோயில் தெரு - 76
சென்னை நடுநிலைப்பள்ளி,
தானா தெரு - 78
சென்னை தொடக்கப்பள்ளி,
புல்லா அவென்யு - 102
சென்னை நடுநிலைப்பள்ளி,
எம்.எம்.டி.ஏ.காலனி - 105
சென்னை நடுநிலைப்பள்ளி,
ட்ரஸ்டுபுரம் - 112
சென்னை நடுநிலைப்பள்ளி,
கிருஷ்ணாம்பேட்டை - 120
சென்னை தொடக்கப்பள்ளி, வன்னிய
தேனாம்பேட்டை - 123
சென்னை தொடக்கப்பள்ளி,
கோயம்பேடு - 127
சென்னை தொடக்கப்பள்ளி,
நெசப்பாக்கம் - 137
சென்னை தொடக்கப்பள்ளி,
விருகம்பாக்கம் - 128
சென்னை தொடக்கப்பள்ளி,
எம்.ஜி.ஆர். நகர் - 138
சென்னை நடுநிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம் - 140
சென்னை தொடக்கப்பள்ளி,
கோட்டூர்புரம் - 172
சென்னை தொடக்கப்பள்ளி, தரமணி -
180

No comments:

Post a Comment