Tuesday, March 11, 2014

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம்: முதன்மை கல்வி அதிகாரி தகவல்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

திருத்தும் பணி இன்று தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 31
ஆயிரத்து 284 மாணவ-மாணவிகள்
தேர்வு எழுதி வருகின்றனர். இது தவிர
தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தற்போது தமிழ் முதல் தாள், 2-ம் தாள், ஆங்கிலம்
முதல் தாள், 2-ம் தாள் ஆகிய
பாடங்களுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ளன.
தொடர்ந்து தேர்வு வருகிற 25-
ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ், ஆங்கிலம் உள்பட
மொழி பாடங்களுக்கான தேர்வு முடிந்ததும்
விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த
விடைத்தாள்கள் திருத்தும்
மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் 2 மையங்களில் தமிழ்,
ஆங்கில பாட தேர்வின் விடைத்தாள்கள்
திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை)
முதல் தொடங்குவதாக மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார்
தெரிவித்தார். தொடர்ந்து அந்தந்த
தேர்வு முடிந்து விடைத்தாள்கள்
மையங்களுக்கு அனுப்பப்பட்ட பின்
விடைத்தாள்கள் திருத்தும்
பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
தேர்வு எழுதாதவர்கள்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2
மாணவர்களுக்கு நேற்று இயற்பியல்,
பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான
தேர்வு நடந்தது. இதில் இயற்பியல் தேர்வில் 20
ஆயிரத்து 311 மாணவ-மாணவிகளில் 20
ஆயிரத்து 254 பேர் மட்டும் எழுதினர். 57 பேர்
தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களில்
118 பேரில் 91 பேர் எழுதினர். 27 பேர்
எழுதவில்லை.
இதேபோல பொருளாதார பாட தேர்வை 9
ஆயிரத்து 200 மாணவ-மாணவிகளில் 9,158 பேர்
எழுதினர். 42 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தனித்தேர்வர்களில் 676 பேரில் 565 பேர் மட்டும்
எழுதினர். 111 பேர் தேர்வுக்கு வரவில்லை.
இயற்பியல் மற்றும் பொருளாதார
பாடத்தேர்வை எழுத மாணவ-மாணவிகளும்,
தனித்தேர்வர்களும் மொத்தம் 237 பேர்
வரவில்லை. நேற்று 2 தேர்வுகளும் எளிதாக
இருந்ததாக தேர்வெழுதிய மாணவ- மாணவிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment