Sunday, March 02, 2014

6வது ஊதியக் குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு; அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவு

தமிழக அரசுப் பணியாளர்களின்
ஆறாவது ஊதியக் குழு தொடர்பான
குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற
நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி
தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக
அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ஊதியக் குழுவால்
நிர்ணயிக்கப்பட்ட
ஊதியத்தை மாற்றி அமைத்து, கடந்த 2011-ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி மற்றும்
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம்
தேதி அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த
அரசாணையால் தங்களின் ஊதியம் வெகுவாக
குறைந்துள்ளது. தங்களின் கிரேடுகள்
மாறியுள்ளன எனக் கூறி அந்த
அரசாணைகளை ரத்து செய்யுமாறு குறிப்பிட்ட
சில துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட
அரசு ஊழியர்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில்
மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிதிகள்கள் என்.பால்வசந்தகுமார்,
பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு விசாரணை வந்தது. அரசுத்
தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர்
ஏ.எல்.சோமையாஜி,
அரசு சிறப்பு வழக்குரைஞர்
டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிள் பிறப்பித்த
உத்தரவு: அரசுப் பணியாளர்களுக்கான
ஊதியத்தை குறைப்பதற்கு முன்
அடிப்படை விதிகள் கூட
பின்பற்றவில்லை என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊதிய விகிதம்
குறைக்கப்பட்டவர்களுக்கு புதிதாக
ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்
என்பதை கண்டிப்பாக அரசு கவனத்தில்
கொள்ள வேண்டும். 20 துறைகளில் உள்ள 52
பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய
முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு,
சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள்
தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி
தலைமையில் தனிநபர் ஊதியக்
குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க
வேண்டும். இந்தக் குழுவில் தலைமைச்
செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக்
கொள்ளலாம். புதிய ஊதிய
விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த
விதிமுறைகளை இந்தக்
குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற
நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக்
குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக்
குழு ஆய்வு செய்து புதிய ஊதிய
விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011
மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட
அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது.
அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய
அளவு குறைந்த
ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment