Wednesday, March 19, 2014

6.5 லட்சம் சைக்கிள்வாங்க டெண்டர்'

மேல்நிலைக்கல்வி கற்கும், மாணவ,
மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ், வரும், 2014 - 15ம்
கல்வியாண்டில், ஆண்டில், 6.5. லட்சம் சைக்கிள்கள் வாங்க, 'டெண்டர்'
கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், மேல்நிலைக்
கல்வி கற்கும், மாணவ, மாணவியருக்கு,
ஆண்டுதோறும், இலவச சைக்கிள்
வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும்,
2014 - 15ல், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த,
2.53 லட்சம் பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட
மற்றும் சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த,
1.97 லட்சம் பேர், தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியின வகுப்பை சேர்ந்த, 1.78 லட்சம்
பேர், இதர வகுப்பை சேர்ந்த, 15 ஆயிரம் பேர்
என, மொத்தம், 6.5 லட்சம் பேருக்கு, இலவச
சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
இலவச சைக்கிள் வாங்குவதற்காக,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர்
அலுவலகம் சார்பில், டெண்டர்
கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம், 15ம்
தேதி வரை, டெண்டர் பெறப்படும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த, முதல்வர்,
ஜெயலலிதா தலைமையிலான அரசு,
இப்போதும், பிளஸ் - 1 மற்றும் பிளஸ் - 2
வகுப்புகளில் நடிக்கும், மாணவ மாணவியர்,
பள்ளிக்கு வந்து செல்ல, சைக்கிள்
வழங்கி வருகிறது.
மேல்நிலைக்கல்வி என்பது, பிளஸ் - 1 மற்றும்
பிளஸ் - 2 படிப்புகளை குறிக்கிறது. இந்த
டெண்டர், அடுத்த கல்வியாண்டிற்கான,
சைக்கிள் வினியோகம் தொடர்பானது.

No comments:

Post a Comment