Friday, March 28, 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு தமிழ் இரண்டாம் தாள் 777 பேர் ஆப்செண்ட்

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள்
தேர்வு எழுத 777 பேர் வரவில்லை.

2013-14ம் கல்வி ஆண்டிற்கான
எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்
தேர்வு நேற்று முன் தினம்
துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல்
தாள் தேர்வு நடந்தது. இதில்,
திருச்சி மாவட்டத்தில்
விண்ணப்பித்தவர்களில் 781 பேர்
தேர்வு எழுத வரவில்லை.
இரண்டாம் நாளான நேற்று, தமிழ்
இரண்டாம் தாள் தேர்வு எழுத
திருச்சி மாவட்டத்தில் 399 பள்ளிகளில்
பயிலும், 20,552 மாணவர்கள், 19,892
மாணவிகள் என மொத்தம் 40,444 பேரும்,
தனித் தேர்வர்கள் 1,369 என மொத்தம் 41,813
பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் 137
தேர்வு மையம், தனித் தேர்வர்களுக்கு 13
மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க
3 மாவட்ட கல்வி அதிகாரிகள்
தலைமையில், 150 பேர் கொண்ட பறக்கும்
படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விண்ணப்பத்தவர்களில் 41, 036 பேர்
தேர்வு எழுதினர். 777 பேர் தேர்வு எழுத
வரவில்லை.
திருச்சி மத்திய சிறையில் 64 கைதிகள்
நேற்று தேர்வு எழுதினர்.
அடுத்து ஆங்கிலம் முதல் தாள்
தேர்வு ஏப்ரல், 1ம் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment