Sunday, March 30, 2014

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம்
வகுப்பு மாணவர்களின்
கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில்,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும்,
மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம்
வகுப்பு
பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல்,
இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தடுக்கும் வகையில், ஒன்பதாம்
வகுப்பில் கற்றலில் பின்தங்கியுள்ள
மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,
அவர்களுக்கு தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு,
சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டு, கடந்த நவம்பர் மாதத்தில்,
அனைத்து பள்ளிகளிலும்,
முன்னறித்தேர்வு நடத்தப்பட்டு, அதில்,
பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள்
தேர்வு செய்யப்பட்டு,
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின்
கற்றல் அடைவுகளை மீண்டும் மதிப்பிடுமாறு,
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம்
உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக,
ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு,
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட
அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment