அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார்
அட்டை கட்டாயம் என கோரும்
அனைத்து உத்தரவுகளையும் வாபஸ்
பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அட்டை கட்டாயம் என கோரும்
அனைத்து உத்தரவுகளையும் வாபஸ்
பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
ஆதார் அட்டைக்கு எதிரன
வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற
நீதிபதி பி.எஸ். சவுஹான்
தலைமையிலான மூன்று நீதிபதிகள்
அடங்கிய அமர்வு, இந்த
உத்தரவை இன்று பிறப்பித்தது.
மேலும் ஆதார் அட்டையை தயாரிக்கும்
பணியில் ஈடுபட்ட 'உதய்' ( Unique Identification
Authority of India -UIDAI) நிறுவனம், ஆதார்
அட்டை வைத்துள்ள நபர் குறித்த எந்த
ஒரு தகவலையும், அந்த அட்டை தாரரின்
அனுமதி இல்லாமல் பகிர்ந்துகொள்ளக்
கூடாது என்றும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
அத்துடன் இந்த ஆதார் அடையாள
அட்டை திட்டம் தனி நபர்களின் அந்தரங்க
உரிமையை மீறுவதோடு மட்டுமல்லாது
, இந்த திட்டத்தின் ஆதாரமாக கருதப்படும்
'பயோமெட்ரிக்ஸ்' தொழில்நுட்பம்,
சோதித்து பார்க்கப்படாததாகவும்,
நம்பகத்தன்மையற்றதாகவும்
உள்ளது என்றும், போதுமான
சரிபார்த்தல்
இல்லாமலேயே பொதுமக்கள் பணம்
தனியார் நிறுவனத்திற்கு
திருப்பிவிடப்படுவதாகவும் நீதிபதிகள்
கடுமையாக விமர்சித்தனர்.
No comments:
Post a Comment