10ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில், குளறுபடி நடந்துள்ளதால்,
பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில்
உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில்
உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழக
மாவட்ட பொருளாளர் ரமேஷ் அறிக்கை:
"தற்போது நடைபெறும் 10 ம்
வகுப்பு அரசு பொது தேர்வுகளில்
அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்,
துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள்,
பறக்கும் படையினர், தேர்வு கூட
கண்காணிப்பாளர்கள் நியமனங்களில்,
பணியில், மூத்த
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிகள்
வழங்கப்படவில்லை.
கடந்த 2006 மற்றும் அதற்கு பின்,
பள்ளி கல்வி துறையில்
பட்டதாரி ஆசிரியர்களாக பணியேற்ற
ஆசிரியர்களுக்கும், 10 ம்
வகுப்பே போதிக்காமல்,
கீழ்நிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும்
பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி
வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் நடந்த 10 ம்
வகுப்பு செய்முறை தேர்வின் போதும், இந்த
குளறுபடி நடந்துள்ளது.
தேர்வு பணியில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களது
பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில்
பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம்
செய்யுமாறு, கல்வி துறை அதிகாரிகளிடம்
மனு அளித்தும் தேர்வு பணி நியமனத்தில்
பணி மூப்பு அடிப்படை கடை
பிடிக்கப்படவில்லை. இது உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment