Thursday, March 13, 2014

இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!!! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள்
பாஸ்போர்ட் எடுக்க, துறையின்
தடையில்லா சான்று பெற இயக்குநர்
அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்.

அரசாணை 140 P & AR DEPARTMENT நாள்:
21.11.2013-ஐ தொடக்க கல்வி துறையில்
உடனே நடைமுறைப்படுத்த இயக்குநர்
நடவடிக்கை. நமது கோரிக்கையின்
மீது இயக்குநரின் துரித
நடவடிக்கைக்கு நமது தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின்
பொதுச்செயலாளர்
திருமிகு.செ.முத்துசாமி Ex.,M.L.C
நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசின் பணியாளர் மற்றும்
நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் கடந்த
21.11.2013 நாளிட்ட அரசாணை எண்:140 ன்
படி, தமிழக அரசு ஊழியர்கள்
வெளிநாடு செல்ல ஏதுவாக
கடவுசீட்டு (பாஸ்போர்ட்) பெற
துறையின் தடையில்லா சான்று
துறைத்தலைவரால் பெறப்பட வேண்டும்
என்ற விதியினை தளர்த்தி தமிழக
அரசின் “B” “C” மற்றும் “D” ஊழியர்கள்
தடையில்லா சான்றினை இனி அவர்கள்
துறை சார்ந்த நியமன
அலுவலர்களே வழங்கலாம்
என்று அதிகார பரவலின் கீழ்
ஆணையிடப்பட்டது., இதன்
மீது பள்ளி கல்வி துறை இயக்குநர்
அவர்கள் 10.01.2014 உரிய
நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
ஆயினும் தொடக்க கல்வி துறையில்
இதுவரை இது சார்ந்த
குறிப்பாணை இல்லாத
நிலை இருந்தது., இந்நிலையில்
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் மாவட்ட செயலாளர்
திரு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட
துணைச் செயலாளர்
திரு.பெருந்துறை மயில்சாமி மற்றும்
பெருந்துறை வட்டார செயலாளர்,
தலைவர் ஆகியோர் பாஸ்போர்ட் பெற
தடையில்லா சான்று வழங்க
கோரி உரிய
கருத்துருக்களை ஈரோடு மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்
அவர்களுக்கு உரிய வழியில்
அனுப்பினர் ஆனால் ஈரோடு மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர் அவர்கள்
விண்ணப்பத்தில்
குறிப்பிட்டுள்ளவாறு தன்னால்
அரசாணை 140 ன்
படி தடையின்மை சான்று வழங்க
இயலாது என்றும், இயக்குநர்
அவர்களுக்கு பரிந்துரை செய்து
அனுப்புவதாகவும் கூறினார்.
இத்தகவலை நேற்று மாலை ஈரோடு
மாவட்ட செயலாளர்
நமது பொதுச்செயலாளர் அவர்களின்
கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மறுகனமே நமது பொதுச்செயலாளர்
தொடக்க
கல்வி இயக்குநரை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு அரசாணை
குறித்தும்
அவ்வாணையினை செயல்படுத்த உரிய
வழிமுறைகள் தொடக்க
கல்வி துறையில்
இல்லாதது குறித்தும் விளக்கினார்.
அதனை கவனமாக கேட்ட இயக்குநர்
அவர்கள் அவ் அரசாணை நகல்
வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
உடநடியாக நமது தலைமை நிலைய
செயலாளர் திரு. க.சாந்தகுமார்
இயக்குநர் வசம்
நேரடியாக அவ்வாணை நகலினை
வழங்கினார் மேலும் இயக்குநரின்
அவர்களின் மின் அஞ்சல் முகவரிக்கும்
அரசாணை நகல் அனுப்பப்பட்டது.
இயக்குநர் அவர்கள் இதன் மீது கவனம்
செலுத்தி இன்று அரசாணையில்
குறிபிடப்பட்டுள்ளவாறு நியமன
அலுவலர்களே (மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்) பாஸ்போர்ட் பெற
தடையின்மை சான்று வழங்க ஏதுவாக
குறிப்பாக ஆசிரியர்கள் விண்ணப்பித்த
நாளில் இருந்து எழு தினங்களுக்குள்
வழங்கும் வகையில் உரிய
வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட
தொடக்க
கல்வி அலுவலருக்கு ஓரிரு நாளில்
அனுப்பி வைக்கப்படும் என்ற
தகவலை இன்று மாலை இயக்குநர்
அவர்கள் நமது பொதுச்செயலாளரை
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கூறினார்.
இயக்குநரின் இந்த துரித
நடவடிக்கையால் இனி தொடக்க
பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க,
துறையின் தடையில்லா சான்று பெற
இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய
வேண்டாம். இயக்குநரின் இந்த துரித
நடவடிக்கைக்கு நமது தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின்
பொதுச்செயலாளர்
திருமிகு.செ.முத்துசாமி Ex.,M.L.C
அவர்கள்
நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment