தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்.கார்த்திகேயன், மாணவர்,
அச்சுதா அகாடமி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்:
'ப்ளு பிரிண்ட்' படி, கேள்விகள் கேட்கப்பட்டது.
ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் அனைத்தும்,
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
ஒரு மதிப்பெண் பகுதியில்,
ஒன்பதாவது கேள்வி பாடத்தின் உள்பகுதியில்
இருந்து கேட்கப்பட்டது. நான்கு மதிப்பெண்
பகுதியில், 39 வது கேள்விக்குரிய பதில்
தெரிந்திருந்தாலே, 9 ம் கேள்விக்கும் பதில்
அளித்துவிடலாம். மொத்தத்தில் தேர்வு எளிதாக
இருந்தது.
பி.சக்திபிரீத்தி, மாணவி, எஸ்.எம்.பி.எம்.,
மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: பாடத்தின்
பின்புறத்தில் உள்ள பயிற்சிகள்,
கேள்விகளை முழுமையாக படித்திருந்தால், 95
மதிப்பெண்கள் மேல், பெற முடியும்.
எட்டு மதிப்பெண் பகுதியில் ஏற்கனவே நடந்த
தேர்வுகளில் பலமுறை இடம் பெற்ற
கேள்வியே கேட்கப்பட்டதால், எளிதில் பதில்
அளிக்க முடிந்தது. செய்யுள் மனப்பாட
பகுதி கேள்வியும் எளிதாக இருந்தது.
பெ.கோவிந்தராசு, ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, க.புதுக்கோட்டை: பிளஸ்
2 வை போல், 'பார்கோடு' முறை இருந்தது. மெதுவாக
கற்றல் மாணவர்கள் கூட, எளிதில் தேர்ச்சி பெறும்
வகையில், வினாக்கள் இருந்தது. இந்தமுறை நன்றாக
படிக்க கூடிய மாணவர்கள், 90 மதிப்பெண்கள் மேல்,
பெற முடியும். பிரிவு நான்கில்
உரைநடை பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி,
யார் வேண்டுமானாலும் எழுதமுடியும். கேள்விகள்
அனைத்தும் புத்தகத்தில் பின்பக்கத்தில்
இருந்து கேட்கப்பட்டிருந்து.
ஏற்கனவே பலமுறை இடம் பெற்ற கேள்விகளே,
அதிகளவில் இருந்தது. இதைவிட எளிமையான
வினாத்தாள் அமைய முடியாது.
No comments:
Post a Comment