Wednesday, March 26, 2014

வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி முடிவுசெய்துள்ளது.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின்
வேலை நாட்களை 200 நாட்களாக என்பதை குறைக்க
நடவடிக்கை எடுக்க
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம்
நமது பொதுச்செயலர்
செ.முத்து சாமி தொலைபேசியில்
பேசினார்.
எனினும் தற்போதைய அரசு விதிகளின் படி வேலைநாட்கள்
220 என்பதை குறைக்க இயலாது என்றும்,
இது குறித்து அரசு முடிவு செய்தால்
மட்டுமே தங்களால் விடுமுறை விட இயலும் எனவும்
இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகத்தில் வெயிலின்
தாக்கமும்,குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக
உள்ளது.காலை 8.30 மணி முதல் மதியம்1.00
மணிவரை என தொடக்க
நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க
க்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்
கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி முடிவு செய்துள்ளது.
மேலும் அடுத்த கல்வியாண்டு (2014-15)முதல்
கட்டாய கல்வி உரிமை சட்டப்படிதொடக்க
நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களை 200
நாட்களாக குறைக்கக்கோரி அரசு மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கவும்
அது சார்பாக தொடர்
நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment