Tuesday, March 11, 2014

போட்டோவுடன் அடையாள அட்டை: ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு

ஆசிரியர்களுக்கு போட்டோவுடன்
அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில்
வழங்கப்பட வேண்டும், என
பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
சபீதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 32
மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள்
உள்ளன. இதில் துவக்க, நடுநிலை,
உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள்
36 ஆயிரத்து 813,
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 8
ஆயிரத்து 395, சுயநிதிப்பள்ளிகள், 11,365
உள்ளன. இதில் மொத்தமாக 56,573 பள்ளிகள்
உள்ளன. இதில் பணியாற்றும்
ஆசிரியர்கள் 56 ஆயிரம் பேர் உள்ளனர்.
மொத்தமாக மாணவர்கள் 1.35
கோடி மாணவர்கள்
கல்வி பயின்று வருகின்றனர். இதில்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்
அனைவருக்கும் போட்டோவுடன்
அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் வெறும்
ஆங்கிலத்தில் மட்டுமே அடையாள
அட்டையில் இடம் பெற்றிருந்தது.
தற்போது புதியதாக வழங்கப்படும்
அடையாள அட்டைகளில் தமிழ், ஆங்கிலம்
ஆகிய இரு மொழிகளிலும் இடம்
பெற்றிருக்க வேண்டும், என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான அடையாள
அட்டை வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள்,
கல்வித்துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென
பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர்
சபீதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment