அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு தன்னுடைய அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அகவிலைப்படி உயர்வினை 10 சதவீத அளவுக்கு அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை.
திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கிறதோ, அதற்கு ஓரிரு நாள்களிலேயே தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவித்து வந்தது என்று அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment