கரூரில் பள்ளி கல்வித்துறை மூலம் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ,மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் 7ம்தேதி நடைபெறுகிறது.
கரூர் மணல்மேடு என்எஸ்என் பொறியியல்
கல்லூõரியில் நடைபெறும்,
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர்
ச.ஜெயந்தி தொடக்கி வைக்கிறார். இதில்
சிறப்பு விருந்தினராக ஜெயப்பிரகாஷ்
காந்தி பங்கேற்று மாணவ,
மாணவிகளுக்கு உயர்கல்வி பெறுவதற்கான
ஆலோசனை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்,
விருப்பம் உள்ள மாணவ, மாணவியரும்,
அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம்.
இத்தகவலை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்
திருவளர்செல்வி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment