Friday, May 23, 2014

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு,
இன்று காலை, 10:00 மணிக்கு வெளியாகிறது.
மார்ச், 26ம்
தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம்
தேதி வரை நடந்த தேர்வை, 10.38 லட்சம்
மாணவ, மாணவியர் எழுதினர். இதன்
முடிவை, தேர்வுத் துறை இயக்குனர்,
தேவராஜன், இன்று காலை, 10:00
மணிக்கு, சென்னையில்
வெளியிடுகிறார்.பள்ளிகளில்,
மதிப்பெண்ணுடன் கூடிய
தேர்வு முடிவை, மாணவர்கள்
அறிவதற்கு வசதியாக, அனைத்துப்
பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகளை,
தேர்வுத்
துறை அனுப்பி உள்ளது.இயக்குனர்,
சென்னையில்
முடிவை வெளியிட்டதும், பள்ளிகளில்,
தேர்வு முடிவு வெளியிடப்படும்.முடிவு வெளியாகும்
தேர்வுத் துறை இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in.

No comments:

Post a Comment