இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல்
ஏப்ரல் 17-ந்தேதி வரையிலும், 10-வது வகுப்பு தேர்வை மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 19-ந்தேதி வரையிலும் நடத்தியது.
இந்தியா முழுவதும் 12-வது வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 47 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 775 பேர் எழுதினார்கள்.
10-வது வகுப்பு தேர்வை இந்தியா முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் எழுதினார்கள். தமிழ்நாட்டில் 10-வது வகுப்பு தேர்வை 23 ஆயிரத்து 488 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 12-வது வகுப்பு தேர்வு முடிவை மே 26-ந்தேதியும், 10-வது வகுப்பு தேர்வு முடிவை மே 30-ந்தேதியும் வெளியிட சி.பி.எஸ்.இ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு மே 26-ந்தேதி வெளிவர உள்ளது. ஆனால் அதற்கு முன்பே அண்ணாபல்கலைக்கழகம் பி.இ. படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு பூர்த்தி செய்து 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவித்து இருந்தது.
எனவே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் தெரியாமல் எப்படி விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள் என்று கேட்டதற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வருகிற 20-ந்தேதிக்குள் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மதிப்பெண் அல்லாத மற்ற சான்றிதழ்களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம். சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த பின்பு இணையதளத்தில் உள்ள மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து பின்னர் அனுப்பலாம். அனுப்பும்போது விண்ணப்பத்தின் நம்பரை இணைத்து அனுப்பவேண்டும்.
No comments:
Post a Comment