தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 409
பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்
துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்
துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இவற்றில் விதிகளை முழுமையாகப்
பின்பற்றாத 1,279 வாகனங்களுக்கு நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.
தொடர் விபத்துகளைத் தடுக்கும் வகையிலும்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்
அடிப்படையிலும்
பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம்
அடிக்க வேண்டும்; வாகனத்தின் முன்புறமும்,
பின்புறமும் பள்ளி வாகனம் என எழுதப்பட
வேண்டும்; வேகக் கட்டுப்பாட்டுக்
கருவி பொருத்தப்பட வேண்டும்; ஓட்டுநர் 5
ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்; புதுப்பிக்கப்பட்ட தகுதிச்
சான்றிதழ், இருக்கை பெல்ட் என்பன உள்ளிட்ட
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் பள்ளி வாகனங்களில்
முழுமையாகப்
பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய
போக்குவரத்துத்
துறை அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இப்போது கோடை விடுமுறையில் மீண்டும் இந்த
ஆய்வை போக்குவரத்துத் துறை அதிகாரிகள்
தொடங்கினர். பள்ளிகள் திறக்க இன்னும்
இரு தினங்களே உள்ள நிலையில் இந்த
வாகனங்கள் மீதான ஆய்வை அதிகாரிகள்
மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துத்
துறை ஆணையர் பிரபாகர ராவ் கூறியது:
பள்ளிகள் இரு தினங்களில் தொடங்கப்பட
உள்ளதால், பள்ளி வாகனங்கள் மீதான
ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளோம்.
கடந்த வியாழக்கிழமை (மே 29) வரை 16
ஆயிரத்து 409 பள்ளி வாகனங்கள்
ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 ஆயிரம்
வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பள்ளிகள் தொடங்குவதற்கு முன் ஆய்வுப்
பணி முழுமையாக முடிக்கப்பட்டுவிடும்.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களில்,
விதிகளை முழுமையாகப் பின்பற்றாத 1,279
வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 395 வாகனங்கள்
குறைகளை நிவர்த்தி செய்து தகுதிச்
சான்றுகள் பெற்றுச் சென்றுவிட்டன.
மீதமுள்ள
வாகனங்களுக்கு காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் அந்த வாகனங்களில் குறைகள்
நிவர்த்தி செய்யப்படாவிட்டால், தகுதிச்
சான்று வழங்கப்பட மாட்டாது என்றார்.
No comments:
Post a Comment