பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மே மாதம் 12 ம் தேதி முதல் மே 16 தேதி வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணை தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் கிடையாது". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment