பிளஸ்-2 பொதுத் தேர்வில் தவறியவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2014 பிளஸ்-2 பொதுத் தேர்வில் பள்ளி மாணவராகவும், தனித் தேர்வர்களாகவும் தேர்வெழுதி தவறியவர்கள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இந்த சிறப்பு துணைத் தேர்வுக்குப் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக மே 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் கிடையாது.
கட்டணம்: தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.50 கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக ரூ.35-ம், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment