தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
பொது பிரிவு மாணவர்களுக்கு ரூ.500-ம், எஸ்.சி./எஸ்.டி./எஸ்.சி.ஏ.மாணவர்களுக்கு ரூ.250 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விண்ணப்ப படிவம் தொடங்கிய முதல் நாளன்று தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 935 விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆனது. விண்ணப்ப படிவங்கள் விற்பனை நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இன்னும் 2 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர்.
நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 361 விண்ணப்ப படிவங்கள் விற்பனையானது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 806 விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
No comments:
Post a Comment