Tuesday, May 20, 2014

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2தேர்வு முடிவு, வரும், 26ம்தேதி வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம்
வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
மார்ச் மாதம், நாடு முழுவதும், 10ம் வகுப்பு தேர்வு நடந்தது.
சி.பி.எஸ்.இ.,யை பொறுத்தவரை,
பள்ளி அளவிலான தேர்வு, சி.பி.எஸ்.இ.,
போர்டு அளவிலான தேர்வு என, இரு வகையாக
நடக்கிறது. இதில், போர்டு தேர்வில ், அதிக
மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா,
ஆந்திரா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட, மேலும்
சில மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தின்,
10ம் வகுப்பு தேர்வு முடிவை, சி.பி.எஸ்.இ.,
நிர்வாகம், நேற்று மாலை வெளியிட்டது.
தமிழகத்தில், இந்த தேர்வை, 50 ஆயிரம் பேர்
எழுதி உள்ளனர்.www.cbseresults.nic.in என்ற
இணையதளத்தில், மாணவர்கள்,
தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த
தேதியை பதிவு செய்து,
தேர்வை முடிவை அறியலாம். மதிப்பெண்
அடிப்படையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,
'கிரேடு' வழங்கப்படுகிறது. மதிப்பெண்
பட்டியலில், மாணவரின், 'கிரேடு'
மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும், 'ரேங்க்'
போன்ற விவரங்களும், சி.பி.எஸ்.இ.,யில்
கிடையாது. தேர்வு முடிவு குறித்து,
சென்னை மண்டல, சி.பி.எஸ்.இ., செயலர், சுதர்சன்
ராவ் கூறுகையில், ''மண்டல அளவிலான
தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட முழுமையான விவரம்,
இன்று தான் தெரியும். மாணவர்கள், இணையதளம்
வழியாக, தேர்வு முடிவை அறியலாம்,'' என்றார்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும்,
26ம் தேதி வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment