பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல்
செய்வதில் புதியமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
செய்வதில் புதியமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, மறுகூட்டலில் மதிப்பெண்
குறைந்தாலும் பழைய
மதிப்பெண்ணே வழங்கப்படும்.
இதுகுறித்து அரசு தேர்வுகள்
இயக்குனர் கு.தேவராஜன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது:–
மறுகூட்டல்
மறுகூட்டல் என்பது அந்த விட
ைத்தாளில் மதிப்பீட்டாளர்களால்
வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள்
வினாவாரியாக, பக்கவாரியாக
மறுகூட்டல் செய்யப்படும். இதில்
ஏதேனும் மதிப்பெண்கள் கூடுதலாக
வந்தால் மட்டுமே கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
ஒரு விடை மதிப்பீடு செய்யப்படாமல்,
திருத்தப்படாமல், திருத்தப்பட்டும்
மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால்
மட்டுமே அந்த விடைக்கு உரிய
மதிப்பெண் வழங்கப்படும்.
விடைகள்
மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள்
குறைவாக வழங்கப்பட்டிருந்தால்
கூடுதல் மதிப்பெண்கள்
வழங்கப்படமாட்டாது. மேலும்
மறுகூட்டலில் மதிப்பெண்கள்
உயர்ந்தால் மட்டும் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
மதிப்பெண்கள் குறைந்தால் பழைய
மதிப்பெண்ணே வழங்கப்படும்.
நேரடியாக மறுகூட்டல்
மட்டுமே செய்தால் போதும்
என்று விரும்புபவர்கள் விடைத்தாள்
நகல் கோர வேண்டாம். அவர்கள் உரிய
கட்டணம் செலுத்தி மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டலுக்கான கட்டண விவரங்கள்
வருமாறு:–
மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல்
பாடத்திற்கு ரூ.305–ம்,
இதரபாடங்களுக்கு ரூ.205–ம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு
மறுமதிப்பீடு என்பது தேர்வரின்
மதிப்பீடு செய்யப்பட்ட
விடைத்தாளினை மூத்த 3 பாட
ஆசிரியர்கள் கொண்ட குழுவால்
மீண்டும் அனைத்து விடைகளும்
முழுமையாக
மறுமதிப்பீடு செய்யப்படும்.
இக்குழுவிற்கு விடைத்தாளில்
ஏற்கனவே வழங்கப்பட்ட
மதிப்பெண்களை கூட்டவோ,
குறைக்கவோ அதிகாரம் உள்ளது.
இக்குழு வழங்கும்
மதிப்பெண்களே இறுதியானது.
மறுமதிப்பீட்டில் கூடுதலாக
மதிப்பெண்
வழங்கப்பட்டாலோ ஏற்கனவே வழங்கப்பட்ட
மதிப்பெண்கள் குறைக்கப்பட்டாலோ
விண்ணப்பதாரருக்கு திருத்தம்
செய்யப்பட்ட புதிய மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படும்.
மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள்
முதலில் தாங்கள் பயின்ற
பள்ளி மூலமும் தனித்தேர்வர்கள்
தாங்கள் தேர்வு எழுதிய
பள்ளி மூலமும் விடைத்தாள் நகல்
கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பித்தவர்கள் அறிவிக்கப்படும்
தேதியில் தங்கள் விடைத்தாள்
நகலினை இணையதளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள
வேண்டும். பின்னர் உரிய பாட
ஆசிரியர்களிடம்
அதனை காண்பித்து அவர்களிடம்
அனைத்து விடைகளையும்
முழுமையாக
மதிப்பீடு செய்து கூடுதல்
மதிப்பெண்கள் பெறக்கூடிய
வாய்ப்பு உள்ளவர்கள்
மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பிக்கலாம்.
3 நாட்களுக்குள்....
சில விடைகளுக்கு கூடுதல்
மதிப்பெண்கள் பெறவாய்ப்புகள்
இருக்கும்.
சிலவற்றிற்கு மதிப்பெண்கள்
குறையவும் வாய்ப்பு இருக்கும்.
கூடுதல், குறைவுக்கு பின்னர்
கூடுதல் மதிப்பெண்கள் பெற
வாய்ப்பு இருந்தால்
மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பிக்கவும்.
மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பிப்பவர்கள் விடைத்தாள்
நகல் பெற்ற 3 நாட்களுக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள்
தங்களுக்கு மறுகூட்டல்
வேண்டுமா அல்லது மறுமதிப்பீடு
வேண்டுமா என்பதை உறுதி
செய்துகொள்ள வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பித்துவிட்டு
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க
முடியாது.
அதுபோலவே மறுகூட்டலுக்கு
விண்ணப்பித்துவிட்டு
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க
இயலாது.
ஸ்கேன் நகல் பெற விரும்புபவர்கள்
அறிவிக்கப்பட்ட கடைசி நாளான 14–5–
2014 அன்று மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்கேன் நகல் பெற
விரும்புபவர்களின் விண்ணப்பங்கள்
மீது உரிய தொடர் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2–
ந்தேதிக்குள்
அனைத்து பாடங்களுக்கும் உரிய
விடைத்தாள் நகல்கள்
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்படும். விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கும்
போது தங்களுக்கு வழங்கப்பட்ட
ஒப்புகைசீட்டில் உள்ள
குறியீட்டு எண்ணினை பதிந்து
தங்களது விடைத்தாள்
நகலினை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment